தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் பானை வைத்து ,ஒற்றுமை எனும் தீ மூட்டி பேர்லின் தமிழாலயத்தில் சிறப்பாக நடைபெற்ற தமிழர் திருநாள்.
“உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து” எனும் குறள் வழி தமிழ்க் கல்விக்கழக பேர்லின் தமிழாலயப் பொங்கல் பால் போல் மனமும் .நீர் போல் தெளிவும் ,வார்த்தையில் இனிப்புமாய் சீரும் சிறப்புமாய் பொங்கி மகிழ்ந்தது .கல்வி கலை பண்பாடு எனும் அசையாத விழுமியக் கற்கள் மூன்று .அதன் மேல் தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் எனும் பானை வைத்து ,ஒற்றுமை எனும் தீ மூட்டி அரிசியுடன் இட்ட பசும் பால் ஆதவன் வரும் திசை பார்த்து பொங்கி வழிந்தது இன்பப் பொங்கலாய்.
அகவணக்கத்துடன் ஆரம்பித்த விழா மங்கள விளக்கேற்றல் தமிழாலய கீதம் வரவேற்புரை வரவேற்ப்பு நடனம் என மேடை நிறைந்த பிள்ளைகளுடன் ஆரம்பமாகியது .ஒரு இனத்தின் அடையாளம் மொழி . அந்த தாய்மொழியை அகவை ஐந்து கூட நிரம்பாத மழலைச் செல்வங்கள் உரையாற்றலும் பாட்டுமாய் ஆடி அரங்கத்தை கரவொலியால் நிறைத்தார்கள்.உரையாடல் கவிதைகள் நாடகம் என நிகழ்ச்சி தொடர்ந்ததும் ஓர் அழகு .
அகவை இருபத்தைந்தை நெருங்கும் எமது தமிழாலயம் அன்று ஒரு சிறு அறையில் பாடசாலை ஆரம்பித்த போது பணியாற்ற வந்த மூத்த ஆசிரியர்களின் வழிகாட்டலில் அன்று மழலைகளாய் வந்து கல்வி கற்ற சிறார்கள் இன்று ஆசிரியர்களாய் பணியாற்றுவதும் ஒரு தலை முறை கடந்த பெரு விருட்சமாய் பேர்லின் தமிழாயம் விளங்குவதற்கு ஒரு ஆழமான சான்றாகும் .
Comments are closed.