“வட்டுக்கோட்டை தீர்மானம் 40 ” வரலாற்று சிறப்பு மிக்க ஆண்டில் பேர்லின் நகரில் நடைபெற்ற தமிழர் திருநாள் 2016

“வட்டுக்கோட்டை தீர்மானம் 40 ” வரலாற்று சிறப்பு மிக்க ஆண்டில் பேர்லின் நகரில் தமிழ்க் கல்விக் கழகத்தின் தமிழாலய பொங்கல் விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது .

தமிழர் திருநாள் அரங்க நிகழ்வுகள் ஆரம்பிக்கும் முன்னர் தமிழ் மக்களின் இருப்புக்காக தம்முயிரை தியாகம் செய்த உன்னத செல்வங்களுக்கு ஈகச்சுடர் ஏற்றி மலர் மாலை அணிவித்து அகவணக்கம் செய்யப்பட்டது .
IMG_9140

புலம்பெயர்ந்து வாழ்ந்தாலும் தமிழின அடையாளத்தையும் , தமிழ் மொழியையும் ,தமிழர் பண்பாட்டையும் , கலை கலாசாரத்தையும் அழிந்து விடாமல் பாதுகாக்கும் வகையில் தமிழர் திருநாள் மிகவும் சிறப்பாக தமிழ் கல்விக் கழகத்தின் வழிநடத்தலில் பேர்லின் தமிழாலய நிர்வாகத்தின் ஒழுங்கமைப்பில் ,. தமிழாலய மாணவர்களின் ஆற்றலில் அமைந்திருந்தது .

ஆரம்ப நிகழ்வாக மண்டபத்தின் வெளித்திடலில் பொங்கலிடல் முதியவர்களின் முன்மாதிரியான செயற்பாட்டில் மிகவும் சிறப்பாக இடம்பெற்றது . தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் , மண்டபம் நிறைந்த மக்களுடன் , மனம் நிகழ்ந்த பெற்றோர்களுடன் தொடர்ந்தது .

பாலர் நிலை குஞ்சுகள் தொடக்கம் மேல் நிலை மாணவர்களின் அனைத்து அரங்க கலை நிகழ்வுகளும் மக்களை ஈர்க்கும் வண்ணம் அமைந்திருந்தது . நன்றி செலுத்தும் திருநாளில், பேர்லின் தமிழாலயம் வளர்ச்சிக்கு ஆரம்ப காலம் தொட்டு இன்று வரை உழைத்தவர்களுக்கும் , மற்றும் பேர்லின் தமிழ்ச் சமூகத்துக்கும் , தமிழ் மொழிக்கும் பாடுபடும் உறவுகளுக்கும் மதிப்பளிப்பு நடைபெற்றது .

பேர்லின் தமிழாலய பொங்கல் விழாவுக்கு பிரதம விருந்தினராக வருகை தந்து உரையாற்றிய பேராசிரியர் டக்மார் ராஜநாயகம் , தனது உரையில் தமிழ் மொழியின் தொன்மையையும் , புலம்பெயர் மண்ணில் தமிழ்ச் சிறார்கள் தமது தாய் மொழியை கற்பது மட்டும் அல்லாது அதை பேணிக்காப்பதின் அவசியத்தையும் உணர்த்தி இருந்தார் .

இத் திருநாளில் தமிழ்க் கல்விக் கழகத்தின் பேர்லின் தமிழாலயத்தில் கல்வி பெற்று 2013/2014 ஆண்டு 12 ம் வகுப்பை சிறப்பாக முடித்த மாணவர்களுக்கு வடமாநில ரீதியாக நடைபெற்ற மதிப்பளிப்பின் நிழற்படங்கள் அடங்கிய தொகுப்பை அரங்கத்தில் திரையில் காண்பிக்கப்பட்டது . அதேபோல் தமிழ்க் கல்விக் கழகத்தால் நடாத்தப்பட்ட தமிழ்ப் பட்டயக் கற்கைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான மதிப்பளிப்பின் நிகழ்வின் காட்சியை மீள்நினைவுபடுத்தும் வகையில் இங்கும் அவர்களுக்கான நிகழ்வு அமைந்திருந்தது .

 

K800_IMG_0014

K800_IMG_0025

K800_IMG_0053

K800_IMG_0103

K800_IMG_0124

K800_IMG_0175

K800_IMG_0180

K800_IMG_0183

K800_IMG_0192

K800_IMG_0194

K800_IMG_0208

K800_IMG_0212

K800_IMG_0316

K800_IMG_0317

K800_IMG_0328

K800_IMG_8930

K800_IMG_8936

K800_IMG_8948

K800_IMG_8998

K800_IMG_8999

K800_IMG_9010

K800_IMG_9023

K800_IMG_9035

K800_IMG_9039

K800_IMG_9056

K800_IMG_9083

K800_IMG_9092

K800_IMG_9100

 

K800_IMG_9139

K800_IMG_9162

K800_IMG_9170

K800_IMG_9192

K800_IMG_9207

K800_IMG_9216

K800_IMG_9221

K800_IMG_9233

K800_IMG_9297

K800_IMG_9312

K800_IMG_9367

K800_IMG_9389

K800_IMG_9395

K800_IMG_9401

K800_IMG_9415

K800_IMG_9426

K800_IMG_9438

K800_IMG_9444

K800_IMG_9458

K800_IMG_9479

K800_IMG_9485

K800_IMG_9518

K800_IMG_9525

K800_IMG_9538

K800_IMG_9552

K800_IMG_9612

K800_IMG_9629

K800_IMG_9649

K800_IMG_9699

K800_IMG_9714

K800_IMG_9734

K800_IMG_9735

K800_IMG_9740

K800_IMG_9797

K800_IMG_9828

K800_IMG_9838

K800_IMG_9867

K800_IMG_9900

K800_IMG_9927

K800_IMG_9934

K800_IMG_9951

K800_IMG_9956

K800_IMG_9988

K800_IMG_9996

Comments are closed.
தமிழ்த்திறன் போட்டி 2023 ற்கான விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
This is default text for notification bar