Die perfekte 25. Jubiläumsfeier unserer Schule – Auswahl der Fotos
மிகச் சிறப்பாக நடைபெற்ற பேர்லின் தமிழாலயத்தின் வெண்பொன் விழா
புலத்தில் விதைத்த தமிழின் உயிர்ப்பில் செழித்து வளர்ந்த “வெண்பொன் விழா”, பேர்லின் தமிழாலயம் பெருவிழா எடுத்து எதிர்காலச் சந்ததியின் நம்பிக்கைத் தூண்களை நிறுத்திய விழா. கல்வியும் கலையும் கண்னெனக் காத்து ஆழவேரோடி ஊன்றிய விழா. யேர்மனியின் தலைநகராம் பேர்லினில் தமிழர்கள் ஒன்று கூடி வெண்பொன் அறுவடை செய்து பொங்கிப் பூரித்த விழா.தாயகத்திலிருந்து வருகை தந்த யாழ் பல்கலைக் கழக வாழ்நாள் பேராசிரியர் சண்முகதாஸ் அவர்களதும் முனைவர் மனோமணி சண்முகதாஸ் அவர்களின் நல்லாசி வீச்சுடனும் , பேர்லின் அஸ் பல்கலைக் கழக பேராசிரியர் மரியா டோர் மார் காஸ்ட்ரோவரேல்ல அவர்களதும் , யேர்மன் தமிழ்க் கல்விக் கழகத்தின் பொறுப்பாளர் திரு செல்லையா லோகானந்தம் அவர்களது பூரித்த மகிழ்ச்சி ஆசியுடனும், மாணவ, மாணவிகளின் கலை நிகழ்வுகளின் சிறப்புடனும், மாணவர்கள் பரிசளிப்பு, ஆசிரியர் மதிப்பளிப்பு , முன்னாள் ஆசிரியர்கள் மதிப்பளிப்பு , முன்னாள் மாணவர்கள் பரிசளிப்பு , முன்னாள் செயற்பாட்டாளர்கள் மதிப்பளிப்பு முதலிய சிறப்பு நிகழ்வுகளுடன், தமிழாலய ஆரம்ப காலத்தின் ஆணிவேராக செயற்பட்டவர்களின் உணர்வை பாராட்டி முள்ளிவாய்க்கால் மண்சுமந்த ” மறம் உயிர்த்த மண் ” நினைவுச் சின்னங்கள் வழங்கி மதிப்பளித்து அனைவரின் மனநிறைவோடு வெண்பொன் விழா இனிதே நிறைவேறியது.