உரமேற்றி எம்மை ஆளும் மாவீரர்
கல்லறையில் ஆழ்ந்த மாவீரச் சாமிகள்
தமிழீழ மூச்சாகிப் பரவுகின்றார் - எமக்கு
வல்லமைகள் தந்தே தமிழீழப் போரின்
வீச்சினில் சக்தியாய் எழுகின்றார்
வடிவங்கள் மாறும் போர்க்களப் பாதையில்
வழித்துணையாக வருகின்றார் - அவர்கள்
அடிதன்னைத் தொடர்ந்தே தமிழீழம் காண
உரமேற்றி எம்மை ஆளுகின்றார்.
தேசியத் தலைவரின் சிந்தனை
'மொழி, கலை, கலாச்சாரம் என்பன ஒரு தேசிய இனத்தின் கட்டமைப்பிற்கு தூண்களாக விளங்குகின்றன. ஒரு தேசியத்தின் ஆன்மாவாகத் திகழ்கின்றன. ஒரு தேசிய நாகரிகத்திற்கு அத்திவாரமாகின்றன."
'Sprache, Kunst und Kultur erscheinen als Säulen des Gebäudes einer nationalen Gemeinschaft. Sie sind die Seele einer Nation. Sie sind das Fundament einer nationalen Zivilisation."
அகரம் எழுதிவைத்த தந்தையைச் சிகரத்தில் வைத்து எட்டாம் ஆண்டு வணங்குகின;றோம் புலத்தில் விதைத்த தமிழின் உயிர்ப்பில் நிலைத்து வாழும் மாமனிதர் - நம் இனத்தில் உதித்த தமிழின் ஒளியாய் என்றும் ஒளிரும் தமிழேந்தல் அன்பை குழைத்து தமிழை ஊற்றி ஊட்டி வளர்த்த பெருமனிதர் - நம் எண்ணச் சோலையில் இறையாய் மிளிரும் தமிழே தந்த புகழ் மனிதர்.
Copyright © 2023 Thamilalayam – Berlin . All rights reserved. Developed by THAAYAKAM LTD