Hoffest der Thamilalayam Berlin – ein neues Konzept, ein einzigartiges Erlebnis

„Von Schülern für Schüler“ – so lautete das Konzept der Veranstaltung „முற்ற விழா“ [mutra vilaa], was wörtlich übersetzt, Hoffest bedeutet und mit dem zum ersten Mal das Ende des Schuljahres der Thamilalayam Berlin und der Beginn der neuen Sommersaison gefeiert werden sollten.  Es ist hervorzuheben, dass die Veranstaltung eines von vielen Projekten ist, mit denen Schüler motiviert werden sollen, die Thamilalayam zu besuchen und unsere Muttersprache Tamil zu lernen.
Es gab nicht nur Stände für Kuchen, Eis, Säfte und Snacks, sondern auch genügend Platz für lustige Spiele und Musik. Es war ein neuer Versuch, der dazu führte, dass diese Veranstaltung jährlich fortgesetzt wird. Der Erlös dieser Veranstaltung geht an Schülerprojekte in unserem Heimatland.
பேர்லின் தமிழாலயத்தின் முற்ற விழா – இது ஒரு முதல் முயற்சி
பேர்லின் தமிழாலயத்தில் மரங்கள் நிறைந்த முற்றத்தில், இந்தக் கல்வி ஆண்டின் நிறைவாக, மாணவர்களுக்காக, மாணவர்கள் பெற்றோர்களுடன் இணைந்து நிகழ்த்திய ஒரு புத்தம் புது நிகழ்வு “முற்ற விழா”. மாணவர்களை ஆர்வத்துடன் தமிழாலயத்திற்கு வரவழைப்பதற்கும், எமது தாய் மொழி தமிழை விருப்பத்துடன் கற்பதற்குமான பல திட்டங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது!
நிகழ்வில், உண்பதற்கு பல வகையான உணவுகள், மகிழ்வதற்கு பல விதமான விளையாட்டுகள், ஓடித்திரிய பெரும் வெளி, அமர்ந்து பேச நிழல் பரப்பிய மரங்கள். மாணவர்களின் ஆர்வமும் மகிழ்வும், இந்த நிகழ்வை ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து நடத்த வழிவகுத்திருக்கின்றது. இந்த நிகழ்வின் உணவு விற்பனையின் வரவு எமது  தாயக மாணவர்களுக்கான ஒரு திட்டத்திற்கு பயன்படுத்தப்படும் என்பதை மகிழ்வுடன் இன்று பகிர்ந்துகொள்கின்றோம்.
Comments are closed.
தமிழ்த்திறன் போட்டி 2023 ற்கான விபரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளன.
This is default text for notification bar